காதல் சொல்லும் வேலை 1

கொஞ்சும்கிளியாய் வந்துநின்றாள் வஞ்சிஅவள் வனப்பாய்... அக்கணமே கண் இமைக்கா வானுலக தேவர் ஆக வரம் பெற்றேன் நான்

வஞ்சியிடம் வாஞ்சையாக பேசிட துடித்தது யென்வாலிப குணம்.. வலியச்சென்று வழியாதே எனதடுத்தது தன்மானம் அதனைமிஞ்சி பஞ்சுபோல் அவள்பின் பறந்துசென்றது யென்மனம் எனைவிட்டு

இசையாய் ஒலித்தது ஓர்ஓசை கோவில்மணி எதிரொலியில் ஓங்கி ஒலித்தது...
ஆம்இதழை அசைத்தவள் என்னவள்
குங்குமம் கொடுங்க அர்ச்சகரே...என்றாள்

இசைவானநேரம் இதுயென இதயம் மின்னியது...பாங்காய் நடந்து பாவைபின்
நின்றேன் ...பளிங்குதேவதை பட்டென்று பறந்தது...அர்ச்சகரை அர்ச்சித்து வந்தேன்

பறந்து சென்ற பச்சைக்கிளி பற்றி சொன்னது சொச்சம்... மிச்சம் மீதி வரவிருக்கும் நேரங்களில். ..

எழுதியவர் : பாளை பாண்டி (17-Jun-21, 7:30 am)
பார்வை : 177

மேலே