கங்கை நதிநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கங்கைநதி நீர்பிறவிக் காட்டுக்கோர் பேரனலாந்
துங்கமுற வப்புனலைத் துய்க்குங்கால் - அங்கவெப்பு
மந்தங் கயம்பித்தம் வாயுமே கங்காந்தல்
உந்துந்தா கங்களும்போம் உன்னு

- பதார்த்த குண சிந்தாமணி

கங்கை நதிநீர் உள்வெப்பம், மந்தாக்கினி, சயம், பித்தம், வாதம், கீழ்ப்பிரமேகம், உடம்பெரிவு, தாகம் போன்றவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jun-21, 8:39 am)
பார்வை : 22

மேலே