முற்றுபெறாமல் தொடரட்டும் உன் ஞாபகம்

என்ன எழுதுவது,
எப்படி எழுதுவது,
என்று எனக்குள் ஒரு சிந்தனை!
முதல் புள்ளியாய் உன்னை வைப்பதா?
அல்லது முற்றுபுள்ளியாய் என்னை வைப்பாதா?
என்பதில் தெளிவு பிறக்கவில்லை!
கலங்கிய நீரோடையையாய் உன் நினைவுகள்!
தெளிவு பெற விருப்பமில்லை எனக்கு!
நெஞ்சை கலக்கியதால் என்னவோ நீரோடையாய் எனக்குள் விழுந்து கொண்டு இருக்கிறாய்!
முற்றுபெறாமல் தொடரட்டும் உன் ஞாபகம்!

எழுதியவர் : சுதாவி (17-Jun-21, 12:25 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 151

மேலே