குறள் பத்து உங்கள் சொத்து

1. வருடத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே சீறுகிறது இயற்கை
எஞ்சிய நாட்களில் சீறுவது மனிதர்களின் இயற்கை

2. நாம் நினைக்கும், பேசும், எழுதும் சொற்கள் எல்லாம் அமல்படுத்தப்படாது
ஏதோ ஒரு தருணத்தில் அனல் பொறி போல் மனதில் மின்னுவது அமல் படுத்தப்படும்

3. ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தினால் ரூ.10000 வரை கூட கிடைக்கலாம்
ஆனால் ஒரு மரத்தை நட்டால், 10000 பேர்களுக்கு கூட ஆக்ஸிஜன் கிடைக்கும்

4. பச்சை மரத்தை பார்த்தால் மனதுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி
பட்ட மரத்தை பார்த்தால் மனித குலத்திற்கே இகழ்ச்சி!

5. தவிர்க்கமுடியாமல் போனால் குறைந்த பட்ச மரங்களை வெட்டலாம். ஆனால் அதை விட இரண்டு மடங்கேனும் மரங்களை வேறு இடத்தில் நட வேண்டும்.

6. பல காடுகளை அழிப்பது சில நாடுகளை அழிப்பதற்கு சமமானது.

7. நாம் சுகமாக வாழ்ந்திட உணவு, உடை, உறைவிடம் தேவைதானே!
சுற்றுப்புறசூழ் சமநிலை தழைத்திட, காடுகளும் வனவிலங்குகளும் தேவை இல்லையா?

8. ஏரிகளையும் ஆறுகளையும் அசுத்தப் படுத்தினால், நாம் நம் சுற்றுப் புறத்தையே அவமரியாதை செய்கிறோம் என்று பொருள் படும்.

9. தொழிற்சாலைகளின் புகைகள் காற்று மண்டலத்தை அசுத்தப் படுத்துகிறது. அசுத்தப் பட்ட இந்த காற்றைதான் நாம் சுவாசிக்கிறோம். நல்ல வேடிக்கை தானே?

10. பெட்ரோல் டீசல் வாகனங்கள் பெருகிக் கொண்டே போகிறது. இதனால் தூய்மையான காற்று கிடைக்காமல் நுரையீரல் ஏற்கெனவே திண்டாடுகிறது. கோவிட் போன்ற அரக்கன் தாக்கினால் இன்னும் அல்லாடுகிறது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Jun-21, 3:09 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 22

மேலே