பெருந்தேட் கொடுக்கி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுடுகாடு மீட்டான் எனப்பெரியோர் சொல்லும்
நெடியபெருந் தேட்கொடுக்கால் நீரார் - பொடிக்கிருமி
புண்கிரந்தி மேகப்புண் பொல்லாக் கருங்கிரந்தி
விண்கரந்து போகாதோ விள்

- பதார்த்த குண சிந்தாமணி

சுடுகாடு மீட்டான் எனப்படும் இச்செடிக்கு பொடிக்கிருமிகள், இரணக்கிரந்தி, மேகப்புண், கருங்கிரந்தி ஆகியவைகள் நீங்கும்

தேட்கடை; தேட் கொடுக்கு எனவும் படும்; இலை, பூ உபயோகம்; சிறுதேட் கொடுக்கு, பெருந்தேட் கொடுக்கு என இரு வகை; சிறுதேட் கொடுக்கால் கரப்பான், எலும்புருக்கு இவை போம்; தேள்கொட்டிய நஞ்சு நீங்கக் கொட்டிய வாயில் பெருந்தேட் கொடுக்கின் இலைச் சாற்றைப் பூசலாம்; பெருந்தேட் கொடுக்குக்குச் சுடுகாடுமீட்டான்' என்றொரு பேர் உண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jun-21, 5:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே