சிறுதேட் கொடுக்கி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிறுதேட் கொடுக்கதனாற் சேயிழையே கேளாய்!
சொறிசிரங்கு புண்கரப்பான் சூலை - கொறுமாந்தை
மேகவெட்டை பித்தவெட்டை மீளா வெலும்புருக்கி
ஆக(ம்)விடுத்(து) ஓடும் அறி

- பதார்த்த குண சிந்தாமணி

இது நமைச் சிரங்கு, இரணக் கரப்பான், கீல் வீக்கம், கொருக்கு மாந்தம், ஒழுக்குப் பிரமேகம், பித்த வெள்ளை, எலும்புருக்கி ஆகியவை நீங்கும்

தேட்கடை; தேட் கொடுக்கு எனவும் படும்; இலை, பூ உபயோகம்; சிறுதேட் கொடுக்கு, பெருந்தேட் கொடுக்கு என இரு வகை; சிறுதேட் கொடுக்கால் கரப்பான், எலும்புருக்கு இவை போம்; தேள்கொட்டிய நஞ்சு நீங்கக் கொட்டிய வாயில் பெருந்தேட் கொடுக்கின் இலைச் சாற்றைப் பூசலாம்; பெருந்தேட் கொடுக்குக்குச் சுடுகாடுமீட்டான்' என்றொரு பேர் உண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jun-21, 5:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே