காதலில் தோல்வி

காதலிக்கிறான் என்றே நினைத்து அவனோடு
பேதை அவள் பழகி தன்னையே
அவனுக்கு தந்தாள் காணிக்கையாய் அவனோ
மலரின் மதுவை உண்டு களிக்க வரும்
வண்டுபோல் அவளோடு பழகி உறவாடி
களித்துப் பின்னே அவளை விட்டு விலக
நூலாய் நொந்தாள் நல்லாள் அவள்
நூலறுந்து வானில் அலையும் பட்டம்போல்
ஆனது அவள் உள்ளம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Jun-21, 8:14 pm)
Tanglish : kathalil tholvi
பார்வை : 52

மேலே