சுனை நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுனைப்புனலைத் துய்த்தார்க்குஞ் சூழ்ந்ததிற்றோய்ந் தார்க்குங்
கனைப்புறுசீ தச்சுரமுங் காணும் - வினைக்குரிய
வாதமுறு மத்தால் வருமே நடுக்கலின்னும்
ஓதுபித்த கோபமுமாம் உன்னு

- பதார்த்த குண சிந்தாமணி

இதை அருந்தினாலோ, இதில் குளித்தாலோ இருமலுடன் கூடிய சீதசுரம், வாத சோபம், நடுக்கல், கபவாத நோய், பயித்திய தோஷம் போன்றன உண்டாகும்

சுனை
விக்கிப்பீடியாவில் இருந்து;

சுனை என்பது இயற்கை நீர் நிலைகளுள் ஒன்று; இது பொதுவாக மலைகளில் காணப்படும் நீர்நிலை யாகும்; இது மலைகளில் தோன்றும் ஊற்று நீர் ஆகும்; இது சிறு அருவி போல காணப்படும்; சிறு குளம் போலத் தேங்கியும் காணப்படும்

சுனைகள் மலைப்பகுதியில் வாழ்ந்த விலங்கினங்கட்கு நீராதாரமாக இச்சுனைகள் விளங்கி வந்துள்ளன; அகநானூற்றில் களிற்று யானை நிரையில் 8 இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகள் உள்ளன; பெரும்பாலான இடங்களில் அவை வளமுணர்த்தவும் வறுமையுணர்த்தவும் கூறப்பட்டுள்ளன. மலைநாட்டு மக்கள் அவற்றை குடிநீருக்காகப் பயன்படுத்தியதாக அகநானூற்றில் குறிப்பு இல்லை

சுனைகள் குறிஞ்சி நிலத்து நீர்நிலைகளுள் ஒன்றாகும்; இவை மலைகளில் உருவாகும் சிறிய நீர்நிலை ஆகும். இதனை,

"பாறை நெடுஞ்சுனை" [1]
"பூவமன் றன்று சுனையுமன்று"[2]
"வான்கண் அற்றஅவன் மலையே வானத்து மீன்கண் அற்றஅவன் சுனையே ஆங்கு"[3]
"தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை" [4] எனவும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சுனை நீரின் தன்மை

சுனை நீர் உண்ணத் தகுந்த நீர் ஆகும். இது சுவை மிக்க நீராக இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளது. "இன்தீம் பைஞ்சுனை" (59) என்றும் "தீம்பெரும் பைஞ்சுனை" (78) என்றும் குறிக்கப்படுகின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-21, 12:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே