காதல் வலி- 91

அவள் கொட்டிய
குப்பைகள்
மக்கிப் போகாமல்
சொக்கிப் போனது

அழகிகளில் அவள் விதிவிலக்கு
அவள் இருப்பதால் அரசு போடவில்லை
அவள் வீதியில் விளக்கு

அவள்
நீதிபதியாக இருந்தால்
நான் தூக்கு தண்டனை
ஏற்கத் தயார்
தூக்கு தண்டனை என்றால்
என் இரு கரம் கொண்டு அவளை தூக்கும் தண்டனை

அவள்
கர்பத்திற்கு பிறந்தவள் அல்ல சிற்பத்திற்கு பிறந்தவள்
தாயின்
கருவறையில் பிறந்தவள் அல்ல
கோயில் கருவறையில் பிறந்தவள்

ஆயிரம் நட்சத்திரங்கள் விண்ணில் இருந்தாலும் ஒரு நிலவிற்கு
ஈடு ஆவதில்லை
ஆயிரம் உலக அழகிகள் இருந்தாலும்
இவள் நிழலுக்குக்கு கூட யாரும்
ஈடு ஆவதில்லை

எழுதியவர் : Kumar (18-Jun-21, 10:52 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 53

மேலே