ஏக்கம்

படுத்துறங்க பஞ்சு மெத்தையோ
பளபளக்கும் பட்டாடையோ
பளிங்கு கண்ணாடித் தரையோ
பார்த்ததில்லை இவள் முன்னாடி..
ஏங்குகிறாள் பருவ மங்கை
இவை எல்லாம் என்று கைகூடுமென்று!
கால் கொலுசு சிணுங்க
கைவளையல் குலுங்க
காதோரம் லோலாக்கு பாட
கருங்கூந்தலிலே பூவாரம் சூட..
ஏங்குகிறாள் பருவ மங்கை
இவை எல்லாம் என்று
கைகூடுமென்று!
ஏட்டுக் கல்வி எட்டா நிலையே
எட்டி நின்று பள்ளிக்கூட நிழல் அறியா நிலையே..
பசியறிந்து பால்சோறு உண்ணா நிலையே..
ஏங்குகிறாள் பருவமங்கை
இவை எல்லாம் என்று கைகூடுமென்று!
காதல் சொல்ல கண்ணன் வருவானோ..
கட்டியணைத்து முத்தம் தருவானோ..
ஏங்குகிறாள் பருவ மங்கை
இவை எல்லாம் என்று கைகூடுமென்று!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (18-Jun-21, 11:11 pm)
Tanglish : aekkam
பார்வை : 189

மேலே