குப்பியும் குடிகாரர்களும்

குடித்தவன் தள்ளாடிக்
குப்புற வீழ்ந்திடினும்
குடியிருந்தக் குப்பிகள்
குப்புற வீழ்வதில்லை
**
குடிகாரன் பார்வையில்
வெற்றுக் குப்பிகள்
குடியிருந்த கோயிலாகின்றன
**
மது நிரம்பியக் குப்பிகள்
போதை வரமளிக்கும்
தெய்வமாகின்றன
**
குடிகாரன் நன்றியுள்ளவன்
அதனால்தான்
முனி கோயிலில் ஆடுவெட்டி
தெய்வத்திற்கும் மதுக்குப்பிவைத்து
தீர்த்தம்போல் இரண்டு சொட்டுப்
படையலில் தெளித்துவிட்டு
மீதியைத் தானே குடித்துவிடுகிறான்
**
என்றாலும்
குடியேறினாலும் இறங்கினாலும்
நிமிர்ந்து நிற்கும் குப்பிகளைபோல்
குடிகாரர்கள் இல்லை,
அவர்கள் தானும் குடித்துத்
தன் குடும்பத்தையும் குடித்து
விடுகிறார்கள்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jun-21, 1:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 32

மேலே