பார்வை ஒன்றே போதுமே

"உன் பார்வை விரிக்குது
நேச போர்வை!

அதன் கோர்வை புரியாமல்
எப்படி எழுதுவேன்?

நீ வைக்கும் தேர்வை....

பிறகு ?

உன் விழிகள் என்னை கண்டு துடிக்க,
அது ஓர் ஆயிரம் கவிதைகள் வடிக்க,

தேவையோ ஒரு பள்ளி இதைப் படிக்க ?
என புரியாமல் என் விழிகள்
நடிக்க,

தொடங்கினேன் இறுதியில் உன் விழியை காப்பியடிக்க!

பிறகு ?

உன் விழியோடு என் விழியை இழைத்தேன்,

என் மனதிலும் உன்னை நுழைத்தேன்,

அளித்தாய் நீ பார்வை எனும்
மழை தேன்,

ஆகா கன்னிப்பயிர் உன்னால் இன்று தழைத்தேன்,

காதலால் உயிர் பிழைத்தேன்."

"ஆஹா! மிக நன்று."

-------

எழுதியவர் : (19-Jun-21, 11:00 am)
சேர்த்தது : Lakshya
பார்வை : 253

மேலே