விடாத களைப்பு தொடாத நினைப்பு

தடாகத்தில் பூத்த தாமரைகளுக்கு
இத்தகை தயக்கமா.
தொடாத தண்ணிரை
விடாமல் தட்டிய தாமரை இலைகள்,
தாங்கிய தண்டில்,
மல மல வென்றே நீரின் மடியில்,
தாமரை இதல்கள் அவிழ்ந்து மலர்வதைப் பார்;
ஆதவனும் வருகைதந்தது, ஆருயிர்தாமரை முகத்தைக்கான
மறுபிறவி எடுத்ததோ;தடாகத்து தாமரை,
இரவெல்லாம் நனைந்த,
ஏக்கத்தில் தவித்தது;
பகலவனின் கடைப் பார்வை பார்க்கத்தான்,
பத்தியம் இருந்ததோ இந்த பங்கஜம்;
ஒத்திகைப் பார்க்கத்தான் ஓடோடி வந்ததோ
ஆதவன்;

அட டா,
துள்ளிய மீன்களும்
சொல்லாமல்,
தள்ளியே விழுந்திட;
வாயைப் பிளந்து வந்த பாம்பும்,
வாகாய் வாயில் கவ்விட,
துடி துடித்தது மீனும்.
விடியலின் விளையாட்டு,
விம்பாய் இறையானது தடாகத்து மீனும்;
உலவுபந்த பெண்கள்,
உடையைமாற்றிக்குளிக்க;
குளிர்ந்தது தடாகமும்;
குறைவைக்காது,
பருகியே கொடுத்தனர் பருவ நங்கைகளும் பசிதீரும்வரை;
மூச்சி பிடிச்சி மூழ்கி எழுந்த;
கயலார்க் கண்ணியரைப் பார்த்து,
மூச்சி பிடிச்சி, பேச்சி, மூச்சி, இல்லாது கிடந்த
இளம் வெட்டுக்கள், பேய் அறைந்ததுபோல் இருக்க காரணம் என்ன!
பார்த்த கண்ணில்;
பசியைத் தூண்டியது என்ன!
நோண்டிய ஆசைகள் தான்;தோண்டியதோ;
தோகை மயிலே!
துவட்டியது போதும்;
துவட்டி வாட்டியத போதும்;
தோகைவை விரித்த போதும்;
தேகம் தாங்காது;
தேகத்தைப் பார்க்க ஒரு கூட்டமே
தவிக்கிது;
விழிகள் வீனைமீட்டுவதென்ன;
வியர்வைத்தளிகள், நீர்த்தளிகளாய்
சிதறுவதென்ன;
சிக்கியது சேல்கெண்டைமீனோ!
வேல்விழியாளோ;
வழிந்த ஆடை, வாய்விட்டுச்சிரித்தது;
வெட்கம்தான் வந்தது, தடாகத்து
தாமரைக்கும்;
தனக்கும் இந்த கதிதானோ என்றே
எண்ணிய வண்ணம் இதழ்களை விரித்தே,
சிரித்தது;
இன்ப நாடகமே;
இனிதாய் அரங்கேறியது;

மாலைப் பொழுதம் புலர்ந்து;
புறப்பட்ட ஆதவனும்,
போய்விட்டான் கடல் அரசியைத்தேடி;
மாலையும் மயங்கியே வந்தது;
பிந்திய பொழுதுதான் ;
பிடிவாதம் பிடித்த பொழுதுதான்;
பந்திவிரித்தது மேற்கே வானம்;
இரவு பூத்தது;
விண்ணில் விண்மின்களின் விளையாட்டுத்தான்;

இப்பொழுதும் தடாகத்து மீனுக்கு இதே கதிதான் ;
நிலவின் விம்பங்களை
தண்ணீரில் பார்த்த பாம்பும்,
படபடத்தே தன்,
கவ்விய வாயை திறந்திட,
துடித்த மீனும்,
திறந்த வாயிலிருந்து,
வழிந்தே தடாகத்து நீரில்
துள்ளிக் குதித்து, தத்திச் சென்றது.

மெல்ல மெல்ல கொட்டிய பனியில்,
கட்டிய இருளில்,
மௌனமாய் மூடியது, இதழை தடாகத்துத் தாமரைகளும்;
தேடிவந்த தென்றலும் தடுமாறியது;
ஒத்திகை பார்த்தது, நிலவும் இரவும்
ஒளிந்து பார்த்தே, வரக், வரக், என்று கத்தியது குளத்துத் தவளையும்;
நிம்மதியாய் உறங்கியது உதயனன் ஏக்கத்தில்
தடாகத்துத்தாமரையும்;

வெட்டிய குளிரில்
வெடவெடத்த குளமும்,
கொட்டிய பனியைக் குடையாய்ப் பிடித்திட;
தட்டிய தடாகத்தில்,,
தவழ்தே விரித்தது இதழை
ஆம்பலும்;
இரவு பூத்ததை, பார்த்தே பூத்தது இந்த ஆம்பலும்;
கந்தர்வப்பூக்களே, காந்தலாய்
குவளைக் கண்ணை விரிக்கின்றாய்,
குதூகலமாக;
உன் காந்தக் கண்ணால்,
இழுக்கின்றாய் நிலவை.

தவளைக்குத் தான் வந்தது, தள்ளாத ஆசை;
தத்தியே குதித்தது,
தரிகெட்ட தவளையும்,
கத்தியே கெடுத்தது,
காதல் வயப்பட்ட குளத்தையும்.

வருடிய இருளைத் திருடிய தடாகமும்,
துவண்டே துடிக்க,
நீரின் மேனியைத்,
தீண்டிய நிலவும்,
தாங்கியது தன் குளிர்ந்த ஒளியால்.

ஓசையில்லாமல் தடாகமும்;
தவழ்ந்தது தண்ணீரின் விழியால்;
வந்த இருளுக்கு வாழ்த்து கூறும் வகையில்,
அலர்ந்தது ஆம்பலும்,
ஆயிரம் ஆயிரம் காலத்து,
இருட்டிய ஈர உறவுகள்,
தடாகமும் நிலவும் உரசட்டுமே!

விடியும் வரை,
வடியும் விரும்பம்,
குளத்தில் குதித்த,
நிலவும் நினைவிழந்து,
மெய்மறந்து மேனி சிலித்திருக்க;

சகிக்கமுடியாத காலையும்;
சட சட வென்றே வம்பாய்,
மெல்ல மெல்ல வர;
சொல்லாமல் சென்றான்,
சோகமாய் நிலவும்.

உதயனனின் உதயத்தைக் கண்ட தாமரையும் தவிப்பில்
மீண்டும் இதழை விரிக்கத் துவங்கினாள் .

தடாகமே, நீ தடுமாறிவிட்டாயா,
தடம் மாறிவிட்டாயா,
விடாமல் விரட்டுகின்றாய்,
விருந்தும் படைக்கின்றாய்,
நிலவுக்கும் சூரியனுக்கும்,
வெட்கம் இல்லையா உனக்கு.
ஓ,
நீ உயர்ந்து விட்டாய்,
தடாகத் தாமரையையும்,
விடாமல் விரட்டிய ஆம்பலையும்,
அவரவர்கள் காதலருடன் சேர,
உதவி விட்டாய்
பொழுதும் இரவும் பார்க்காமல் உன் பணியை செய்துவிட்டாய்
பொழுதும்; இரவும் பொல்லாத காதலும்
செம்மையான பணி,
சிறப்பாய் செய்திடு,
உனக்கும் வரும்
விடாத களைப்பு,தொடாத நினைப்பு.
தொடட்டும் தாடாகத்தை,
தவளையும் மீனும்.
உலவியே உலவு வரும் பாம்பே,
ஓடிடு ஓடிடு,
ஓய்வெடுக்கட்டும் தடாகமும்,
ஒளிரட்டும் உண்மையான காதல்.
உதவிடட்டும் தடாகத்து நீரும்.

ஆட டா
இது தான் குதித்தே குளித்த குளத்துக்குள் காதலோ
விரித்தே மலர்ந்து விடாத காதலோ;
திகைத்தே மலர்ந்த தெவிட்டாத காதலோ.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (19-Jun-21, 12:13 pm)
பார்வை : 39

மேலே