நிழல் நிஜமாகிறது

" தாய் என்பவள் ' நிஜம் '
அந்த நிஜத்தின் ' நிழலே ' தந்தை!

நிழல் எப்போதும் தெரிவதில்லை,
ஆனால் நிஜத்தை
அது எப்போதும்
பிரிவதில்லை .

" நிஜமாய் அன்பளிப்பவள் தாய்! நிழலாய் அதற்க்கு என்றென்றும் துணை நிற்பவர் தந்தை!

'நிஜத்தை ' பிரதிபலிக்கும்' நிழல்,
நிழலை ' எதிரொலிக்கும்' நிஜம்,

நிஜத்தை மறக்காதே!
நிழலைத் துறக்காதே!

ஏனென்றால் ?

நாளை நீயும் நிஜமாகலாம்,
அல்லது நிஜத்தின் நிழலாகலாம்,

அற்புதமான அந்த தந்தை
எனும் நிழலை போற்று!
என்றென்றும் அவர்தான் நம்
நிழல் என்ற உண்மையை ஏற்று."

-------

எழுதியவர் : (20-Jun-21, 3:35 pm)
சேர்த்தது : Lakshya
பார்வை : 83

மேலே