மாற்றமும் தடுமாற்றமும்

சிற்றுர் சிறுகாடு தாண்டியே சென்றேன்;
சிரித்தது சரிந்த விரிந்து கிடக்கும் பெருங்காடு;
சிலிந்தது என் உடம்பு.

உயர்ந்தே உதித்த சூரியனின் வருகையால்,
சிவந்திட்ட உயிக்காடு,
சினுங்கியது வனத்து மரங்கள்,
அது சுமந்த பச்சைக்காடு,
வரையாத வனக்காடு,
மணந்திட்ட பூக்காடு
மண்டியிட்டு மான்கள் ஓடியகாடு;
மண்டிய அழகு நிறைந்த காடு
மனம் விட்டுப் பேசியது என்னோடு;
மந்திகள் தங்கியகாடு;
மலைச் சறுக்கல் நிறைந்த காட்டு;
மழைச் சாரல்களைச் சுமந்தகாடு
மழலையாம் அருவிகள்,
மனம் மகிழ்ந்தே பேசியக்காடு;
மந்தியின் கொஞ்சல் இங்கு உண்டு;
மங்கைகளின் கெஞ்சலும் இங்கு உண்டுபாரு.

மாஞ்சோலைகள் மண்டிய காடு;
மயக்குது மனத்தைப்பாரு;
முந்தி வந்து முளைத்த பூக்கள்;
மூக்கைத்துளைத்தது அதன் வாசனை.

முதுகில் அழகைச்சுமந்த வண்ணத்தப்பூச்சிகள்
பட்டாடை உடுத்தி வந்தன;
முள்ளைச் சுமந்த முல்லைவனக்காடு.

ஏகாந்தத் தென்றல், எட்டி வலம் வந்து எங்கும் திரிந்தகாடு
ஒழுகும் தேன் அடை;
தேடிவந்த கரடி,
திகட்டாமல் திண்ணு கொண்டே இருந்த பறவைகள்;
பலாபழந்தை ருசித்த காக்கை;
வழியும் மதுவை உண்டு களித்த வண்டார்;
வாய் நிறைய சுமக்க முடியாது சுமந்து சென்ற
செவ்வெரும்புக் கூட்டம்;
படுத்து பள்ளிகொண்ட பாம்பு;
அடித்துப் போட்டது போன்று,
அசைபோட்டுக்கொண்டே உறங்கும் பசுக் கூட்டங்கள்
பசுமைச் சாலை,
பாய்விரித்தது அழகை.

குயிலின் வருகை;
குரல் தந்த குளுமை;
எல்லாம் தடையற்ற வரவு;
ஊட்டியது உறவை.
இயற்கையின் நடனம்,
நடந்தேன் மீண்டும்; இயக்கையின் மீது காதல் வயப்பட்டு.

கீழ்வானத்தின் அடியில் நின்று
மாடுகளையும் ஆடுகளையும் பேச்சல் விட்டு திரும்பி அழைக்கும் இடையன்.
அவனது ஓசை;
மஞ்சல் பூசிய வானம்;
கொஞ்சிய மேகம்;
மெல்ல மெல்ல அழகை மாற்றியது கீழ்வானம்.

வயல் வெளியில் மலர்ந்து கிடந்த சூரியகாந்திப்பூவும்,
மஞ்ச உடை போத்திய எள்ளுக்காடும்,
ஏகாத்தத்தின் உச்சம் தான்
வந்த வனரானி;
வடித்திட்ட கலைவானி;
எடுத்துக் கூறினால் ஏகாத்த வாழ்கையின் பெருமையை;
சிறிய வீடுதான்,
அழகாக அமைத்த பரண்தான்.
புன்னகைதான் அவளின் புதையாத சொத்து,
அமைப்பான வீடு,
அதை சுற்றி இயற்கைக்காடு;
படர்ந்த பூசனிக்காய் கொடி;
பாம்பாட்டம் தொங்கும் புடலங்காய்;
குரும்பயிறு குறையில்லாத வாழ்க்கை;
அடர்ந்த காட்டினைத் தாண்டிச்சென்றேன்;
சுரம் கொடுத்த அருவியின் ஆட்டம்;
சுண்டியிலுத்து என் மனதை.
கிளைக்கு கிளை தாண்டி ஓடிய குரங்கார்;
லாவகமாக வில்லில் கல்லை வைத்து,
பழம் பரிக்க வந்த குரங்கை விரட்டும்
காடர்;
மாலைப்பொழுது மயக்கியது அழகை;
பறவைகளின் ரீங்காரம்;
பாடும் பல வகை சுரங்கள்;
மரங்கள் எல்லாம்,
பறவைகள் பூத்திருக்க;
இடையில் தாவிய குரங்குக்கு பயந்து,
பறந்து மீண்டும் அமரத்துடிக்கும் பறவைகள்;
சிறகுகளின் சிதறல்கள்;
சிலிர்த்து அடிக்கும் சிறகுகள்;
அலரும் பறவைக்கூட்டம்.

இரவும் பூத்தது;
அழகிய வனம் காணாமல் போனது இருட்டில்;
மின் மினிப்பூச்சிகளின்
துளித் துளி சிதறிய வெளிச்சத்தில்,
சிரித்து கொண்டு இருந்தன சோலைகள்.
பூத்த நட்சத்திரங்களும்,
விண்ணில் தூவிக்கிடக்க
தாவி வந்தான் தடுமாற்றத்துடன் நிலவும்;
நித்திறை நீண்டது;
புல்தறை உறக்கம் புதிய சுகம்;
பொழுது மெல்ல மெல்ல விடியத்துவங்கியது;
புதுமை அழகைத் தூவியது;
துடிப்பான கானகம்;
மிண்டும் மிளிர்ந்தது.

விரிந்த குளத்தில் விதைத்த பனிமூட்டம்;
வெள்ளிக் கம்பியை வீதியில் வீசியது போன்று,
கதிரவனின் கதிர் ஒளிக்கற்றை
பனியின் மீது பாய,
மிதமான புகைதான்,
மௌனமாக எழுந்த பொழுதுதான்;.
குளிரை விரட்ட
மூட்டிய தீயைச் சுற்றி
அமர்ந்த குழந்தைகள் பெருசுகளின் கும்மாளம்
குறையில்லா வனவாசம்;
பனித்துளிகள்,
வெதவெதப்பான குளிரு,
வாய்குள் பற்களின் போராட்டம்;
வெட வெட குளிரு;
தடாகத்தில் பனிப்புகை;
மெதுவாய் தொடு மேகம் போன்று உயர,
புள்ளில் பூத்த பனித்தளிகள்;
வைரமாய் ஜெலித்து வந்த கதிரும்;
வந்தே நெழிந்த பாம்பும்;
வரட்டுத்தவளை வம்பாய் வந்த மாட்டியது

கூடியது சந்தை,
குறையில்லை சப்தத்திற்கு;
தேடிய இடங்கள் எல்லாம் தெவிட்டாத பழக் குவியல்;
தொனத்தொனப்பேச்சி;
தொங்கும் தோலாக்கை,
தாங்கி வந்த வஞ்சி;
வரகரிசி விற்ற காசுக்கு,
வம்பாய் வாங்கிச்சென்றாள்;
வேண்டாத நாகரீகப்பொடியை;
அன்பான ஆதிவாசிகள்;
அமுத உணவு படைத்தனர்;
மண்சட்டி குழம்பு, மணந்தது எட்டு ஊர் தாண்டி;
புகைந்த கல் அடுப்பில்,
புதுமை பல செய்தாள்,
விரைவில் உணவு,
விடுபடாத மனசு,
பூத்தேச் சிரித்த சாதம்;
புளிக்காச்சல்;
வச்ச குழம்பு வத்த குழம்பு;
குரும்பயிறு கூட்டு;
கடிக்க மண்சட்டியில் பொறித்த அப்பளம்;
எல்லாம் மணக்குதாம் இன்று நினைத்தாலும்.

ஊட்டிய சோறுக்குள் ஒழிந்து கிடந்தது தாய்பாசம்;
உறவு இல்லா உறவுதான்;
உடன்பிறக்கா உறவுதான்;
மணந்த குழம்பில் மகிழ்ந்து கிடந்தது நேசம்;
இன்னும் சாப்பிடுக;
கோழிகொரிப்பதுபோல் கொரிக்காமல்
அள்ளி துண்ணுக;
என்ற அன்பின் வார்த்தை;
அடிமனதைத் தொட்டது.

தொண்டைவரை உணவு;
அன்புத்தொல்லையின்
ஆனந்தத் தாண்டவம்;
பூத்த புது உறவு;
சொன்னால் உனக்கு தெரியாது அப்பா;

படர்ந்த காடு;
செழிப்பான செடி கொடிகள்; சிறந்த மனித இனங்களைவிட்டு
பட்டணம் வந்தேன் புகைவண்டி ஏறி


சென்னைப்பட்டணம், புழுதிக் கூட்டம்தான்;
நாத்தம் பிடிச்ச நகரைக் கண்டேன்; நரகம் தான்
எங்கும் ஓட்டம் தான்;
ஏன் இந்த தேடல் என்று, தெரியாத கூட்டம் தான்;
சாக்கடை அருகில் சாம்ராஜியம் தான்;
ஒதுங்க இடமில்லாமல் வாகனங்களின் ஓட்டம்;
குப்பை மண்டலம் தான்;
குண்டு குழிகள் நிறம்பிய இடங்கள் தான்;
மனிதாபி மானம் மக்கிய மனிதக்கூட்டம்தான்;

எங்கும் இம்சைதான்;
தள்ளிக்கொண்டே ஓடும் கூட்டம் தான்;
தடுமாறும் கூட்டம் தான்;
பேருந்தில் கூட்டம்;
பொது இடத்திலும் கூட்டம்;
கடைகள் காம்ளக்சில் கூட்டம்;
நிறம்பி வழியும் சினிமா தியேட்டர்களும்;
ஜவுளிக் கடைகளும்;
இதயமில்லாத மனிதக்கூட்டம்;
இருக்கமான வாழ்க்கை;
இரவு பகல் பொழுது போக்கு;
அரை குறை ஆடைகள்;
அசிங்கமான நாகரீகம்;
முறைதெரியாத முரட்டுக்கூட்டம்
தேவையற்ற தேடல்;
செயல் இழந்த வாழ்க்கை;
காசு பணத்திற்காக ஓடும்;
காசு நோய் தொத்தியகூட்டம்;
பட்டிணம்; பாசை மாறிய பட்டிணம்
பணம் காசு குடிகொண்ட பட்டிணம்;
பசி பட்டிணி நிறம்பிய பட்டிணம்;
ஆண்பெண் அடையாலம் தெரியாத ஆபத்தான பட்டிணம்;
கண்ணுக்கு எட்டியவரை;
உயர்ந்து நிற்கும் கட்டிடங்களும் டவர்களும் தான்;
சுத்தமில்லாத காற்று;
சுவாசிக்கவே நேரம் கேட்டும் மக்கள் கூட்டம்;
சுகத்தை மறந்து;
சுற்றத்தை இழந்த கூட்டம்;
சுத்தி கத்தித் திறிவது எதற்கு.

பாசம் இல்லாத தாய் ;
பார் செல்லும் தகப்பன்;
வேட்டையாடும் மனிதக்கூட்டம்;
படிப்பிலும் போட்டி;
பாசத்திலும் போட்டி;
பிறந்த குழந்தையை
பார்த்திட நேரம் இல்லை;
ஆயாவின் அணைப்பு,
அன்னையின் அலட்சியம்,
கிரிச்சியில் வசந்தம்,
உறவை மறந்த குழந்தை,
ஓய்வற்ற ஓட்டம்;
தேடலின் முடிவில் மரணம்.

மலைமனிதனைக் காண்போம்;
இனியாவது,
தேவையற்ற தேடலைத் தவிர்போம்;
மலைமனிதனைக் காண்போம்;
இனியாவது மாறுவோம்;
இயற்கையின் வளங்களை;
அழித்திடாது காத்து இருப்போம்;

நீ
இழைத்த கொடுமையை கண்டு;
அழித்தே தீர்த்தாள் இயற்கை;
நெருப்பாக நீராக வந்து
அழித்தது போதும்;
அண்டம் அழித்திட அல்ல;
அண்டியே வந்தாய்,
அழிந்தே போவாய்;

பணத்தை தேடிய பயணத்தில்,
பாசத்தை தொலைத்தாய்;
பணக்குவியலுக்கு மனக்கோட்டை கட்டினாய்;
தின்ற உணவில் உயிர்ச் சத்து இல்லை,
உண்ண நேரம் மில்லை;
உடுத்த நேரமில்லை;
பாசத்தை வடிக்க நேரமில்லை;
கைபேசிக்குள்
உன் உயிர்க் குழியை மறைத்தாய்;
உறவையும் துடைத்தாய்;
தொலைத்த உறவில்;
தளைக்குமா பாசம்!
தளர்ந்த நாட்களில்;
தவத்தை தேடினாய்;
வந்த பணத்தை,
வீம்பாய் செலவு செய்தாய்;
வரவுக்கு மீறிய ஆசையில்,
நிம்மதியைத் தொலைத்தாய்;
வந்த நோய்கு பயந்து ஓடினாய்.
உறக்கம் வராத ஒரு கூட்டம்;
உணவின்றி தவிக்கும் மறு கூட்.டம்;
நின்றிடாத ஓட்டம்;
முறைதெரியாமால் முட்டியே ஓடும் கூட்டம்;
ஓய்வற்ற ஓட்டம்; தேவையற்ற தேடல்;
செயற்கை உலகம்,
செயல் இழந்த வாழ்க்கை;

தேவையற்ற ஓட்டத்ததையும்;
தெளிவில்லாத வாழ்க்கையையும் தவிர்ப்போம்;
இயற்கை அன்னையின் மடியில்,
ஏகாந்தமாய் வாழக் கற்றுக்கொள்வோம்.

எடுத்த உயிரு ஒன்று;
போகும் உடலும் ஒன்று;
எத்தனை அள்ளினாலும்;
பிறக்கி எடுத்து செல்வது,
ஒன்றும் இல்லை.
மலை மக்களைக் காண்போம்
மறுபிறவி எடுப்போம்;
எதிர்கால இனத்தவருக்கும்;
எடுத்தும் வைப்போம்.
மாற்றம் தடுமாற்றமானல்;
தொலைத்து விடுவாய்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (20-Jun-21, 3:49 pm)
பார்வை : 54

மேலே