கரு வவ்வால் கறி Black Pomfret Fish - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செங்கரப்பான் மேகஞ் சிறுசிரங்கும் உண்டாகும்
வெங்கொடிய நீரிழிவும் விர்த்தியாங் - கொங்கைதனிற்
பாலூறும் மெத்தப் பருகிற் கருவவ்வால்
மேலூறும் போகம் விதி

- பதார்த்த குண சிந்தாமணி

இதன் கறி கரப்பான், பிரமேகம், சிறுகிரந்தி, மிகுமூத்திரம், வீரிய விருத்தி இவற்றை யுண்டாக்கும்; தாய்ப்பாலைப் பெருக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-21, 10:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே