ஆசை ஆசையாய்

ஆசை ஆசையாய்

கரம் பற்றி
ஆசை ஆசையாய்
நீண்ட தூர நடை பயணம்

நெற்றி முகர்ந்து
ஆசை ஆசையாய்
ஒற்றை முத்தம்

தோள் சாய்ந்து
ஆசை ஆசையாய்
குட்டி உறக்கம்

வண்டியில் உன்னுடன்
ஆசை ஆசையாய்
பின் இருக்கைப் பயணம்

சமையலறையில்
ஆசை ஆசையாய்
உன் சில்மிசங்கள்

எனக்கு பரிசாக
ஆசை ஆசையாய்
வாங்கி தரும் ஒற்றை ரோஜா

உனக்காக நான்
ஆசை ஆசையாய்
வடித்து வைத்த கவிதைகள்

உனக்காக
ஆசை ஆசையாய்
காத்துக் கிடக்கும் நான்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (20-Jun-21, 11:32 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 109

மேலே