அவரவர் பார்வை

பால் போல்
கொட்டும்... அருவியைப்
பார்த்ததும்...

குளிர்ந்திருப்பதால்
தான் மட்டும்
*குளிக்க* ஆசைப்படுகிறான் ...
இளைஞன்...

சுவையுடன் இருப்பதால்
தான் மட்டும்
*குடிக்க*
ஆசைப்படுகிறான்
நகரத்தான் ...

விரக்தியால்
தன்னை மாய்க்க...
*குதிக்க*
ஆசைப்படுகின்றான்
தோல்வி அடைந்தவன் ...

விளைந்தால்
பலர் பசியாற...
*திருப்பி விட*
ஆசைப்படுகிறான்
விவசாயி....

எழுதியவர் : PASALI (21-Jun-21, 7:15 am)
சேர்த்தது : PASALI
Tanglish : avaravar parvai
பார்வை : 90

மேலே