மனைவி

கட்டில் மேலே பூச்செண்டு
கள்ளம் இல்லா கற்கண்டு
காலையிலே நீ விழிப்பாய்
கணவனான எனை கண்டு

சமையல் கலை புது நெல்லு
சலனம் இல்லா வைரக்கல்லு
பாலைக் கொண்டு வரும்போது
பளிங்கு போலத் தெரியும் பல்லு

ஜன்னலோரத் தென்றல் காற்று
சத்தம் இல்லா நீர் ஊற்று
அன்னம் நீயும் இடுகையிலே
பேசும் பேச்சு தேன் ஊற்று

கோவில் அருகே தெப்பக்குளம்-நீ
ஆன்மீக சுற்றுலாத்தலம்
அர்ச்சனை நீ செய்ய செய்ய
வீட்டில் பெருகும் செல்வ வளம்

இராமன் வீட்டு வில் அம்பு
இராவணா உனக்கேன் வம்பு
அழகாய் நீ கூறும் கதையில்
குழந்தைக்கும் பிறக்குது புது தெம்பு

தண்ணீர் கலக்காத பழச்சாறு
தாங்கி பிடிக்கும் அடிவேறு
உறவினரை நீ கவனிக்கையில்
ஊட்டிக்கு சென்றது என் மன தேரு

பொன்னிற மேனி தேகம்
உலக அழகில் நீ ஒரு பாகம்
நித்தம் உன்னை பார்க்கையில்
நிலவுக்கும் வரும் மோகம்.

எழுதியவர் : கண்ணன்செல்வராஜ் (21-Jun-21, 3:24 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : manaivi
பார்வை : 157

மேலே