கருவிழியில் எழில்மிகு காவிரிப்புனல் காதலைப் பேசுது

சிந்துதேவான் மழையமுதை இனியபூஞ்சா ரலாய்இனிதாய்
சிந்துதேஉன் இதழ்கள்தே னினைபுன்னகைபூ மலரினைப்போல்
கருவிழியில் எழில்மிகுகா விரிப்புனல்கா தலைப்பேசுது
கலைந்திடும்கார் முகில்கூந்தல் மென்காதல் தென்றலை !

-------------------------------------------------------------------------------------------------------------------------
யாப்பார்வலர்களுக்கு மட்டும் :

இது யாப்பு வழியில் வடிவமைக்கப்பட்ட தரவு கொச்சக் கலிப்பா

சிந்/துதே/வான்---புளிமாகாய் முன் மழை --நிரை
காய் முன் நிரை கலித்தளை எனப்படும் இப்பாவில் இத்தளைகள்
மிகுதியாகப்பெற்று மாச்சீர் விளங்கனிச்சீர் தவிர்த்து வந்தால்
தரவு கொச்சக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-21, 6:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே