அவள் இல்லை இல்லையே என்னோடு

அவள் இல்லை இல்லையே என்னோடு;
ஆனால்
அவள் நினைவுகள் செல்லவில்லை அடியோடு;
அவள் இல்லை இல்லையே என்னோடு;
என் விழிகள் உறங்கியது,
அவள் நினைவோடு;
அவள் இல்லை இல்லையே என்னோடு;
அவள் இழப்பை அறிந்தேன் நிழலோடு;
அவள் இல்லை இல்லையே என்னோடு;
அவள் சிரிப்புவந்து சிதைக்குது மனதை,
வெறுப்போடு.
அவள் இல்லை இல்லையே என்னோடு;
ஆனால் என் இதயத்திற்கு
இருப்புக் கொள்ளவில்லை நினைவோடு;

அவள் இல்லை இல்லை என்று உடன்படவில்லை,
தவிப்போடு,
உதடுகள் சொல்லவில்லை சொல்லவில்லை,
சோகத்தின் வெளிப்பாட்டை.
அவள் இல்லை இல்லையே என்னோடு,
ஆனால் மூச்சடைக்கவைத்தாள்,
கனவோடு.
அவள் இல்லை இல்லையே என்னோடு;
ஆனால்
வெப்ப நீர்விழிச்சாய் வழிகின்றாள் கண்ணோடு .

அவள் இல்லை இல்லையே என்னோடு;
இந்த இரவும் வந்தே தொல்லை தந்தது,
கனவோடு.

அவள் இல்லை இல்லையே என்னோடு;
இனி போராட எதுவில்லை என்னோடு.

அவள் இல்லை இல்லையே என்னோடு;
இந்த
உலமே அநாதையாய் தெரியிது உயிரோடு.

அவள் இல்லை இல்லையே என்னோடு;
என் தூக்கத்தைத் துளைத்துதுவிட்டு,
ஏக்கத்தில் தவிக்கிறேன்,
அவள் நினைவோடு.

அவள் இல்லை இல்லையே என்னோடு;
ஆனால் என் சுவாசக்காற்றாய் மாறினாள் என் உயிரோடு;
அவள் இல்லை இல்லையே என்னோடு;
என்சுவாசமும் சுவைக்கிறது,
அவள்
சுட்ட நினைவோடு.

அவள் இல்லை இல்லையே என்னோடு;
என்னைத் தீண்டிய தென்றலும்,
தீயாய் கொதித்தது,
அவள் தவிப்போடு.

அவள் இல்லை இல்லையே என்னோடு;
தொடர்ந்து ஏமாறுகின்றேன்;
தொடுவானமாய் நிதந்தோரும்.

அவள் இல்லை இல்லையே என்னோடு;
இவள் முகவரியையும்,
தொலைத்தேன் அவளோடு.

அவள் இல்லை இல்லையே என்னோடு.
என் கண்ணீரும் வளர்க்குது அவளைவிடாது .

அவள் இல்லை இல்லையே என்னோடு;
அவள் நினைவுயும் அழித்திட முடியாது,
என்னோடு

அவள் இல்லை இல்லையே என்னோடு
என் முடிவும் முணகுது உடலோடு.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (22-Jun-21, 9:49 am)
பார்வை : 58

மேலே