உலக வாழ்வின் நிறைவான இன்பம் எது

உலக வாழ்வின் நிறைவான இன்பம் காதலன்று, காமமன்று
நம் கண்கள் சொல்லும், விருந்தைத் தரும் இயற்கை என்று..அழகிய இயற்கை என்று

காலை கண்கள் விழித்தால்,கதிரவன் ஒளி தெரியும் தங்க நிறத்தில்
அதைக் காணக் காண இன்பம் மலரும் நம் முகத்தில்...

(உலக வாழ்வின் நிறைவான இன்பம் காதலன்று, காமமன்று
நம் கண்கள் சொல்லும், விருந்தைத் தரும் இயற்கை என்று..அழகிய இயற்கை என்று)

சூரியஒளி கொண்டு ஆகாயம் அழகு அடடா, அடடா, அற்புதமே, ஓஓஓஓஓஓஓ
இதைக் கண்ட செடிகளும் மலர்களும் ஆடும் அழகு ஆனந்தமே

(உலக வாழ்வின் நிறைவான இன்பம் காதலன்று, காமமன்று
நம் கண்கள் சொல்லும், விருந்தைத் தரும் இயற்கை என்று..அழகிய இயற்கை என்று)

பொன்னொளி பட்ட நீரோடைகள் பாய்ந்து செல்லும் அழகைப் பாரு
மலைகளின் மேலே ஒழிந்து கொண்ட இயற்கை அன்னை செழிப்பைப் பாரு
காலைக் காற்று தாங்கி வரும் மலரின் மணத்தை உணர்ந்து பாரு
இயற்கை அழகே இன்பம் என்று ஒவ்வொரு நாளும் நீயும் பாடு..
ஒவ்வொரு நாளும் நீயும் பாடு..
ஒவ்வொரு நாளும் நீயும் பாடு..

(உலக வாழ்வின் நிறைவான இன்பம் காதலன்று, காமமன்று
நம் கண்கள் சொல்லும், விருந்தைத் தரும் இயற்கை என்று..அழகிய இயற்கை என்று)

ஆனந்த ராம்

எழுதியவர் : ramasubramanian (22-Jun-21, 1:11 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 112

மேலே