ஒற்றையாய் பிறந்தவள்
உள்நெஞ்சு நோக
புழுங்குகிறது மனம்
ஒற்றையாய் பிறந்தவளுக்கு....
பகுத்தறிவு ஊட்ட
பண்போடு வளர்க்க
பக்குவமாய் எடுத்துச் சொல்ல
பட்டினம் போய் வர
பட்டுத் துணி வாங்கித் தர
பனை ஓலை பதினி பருகிட
பங்கு போட்டு நுங்கு தின்றிட
பத்து மாதம் ஈன்றிடாத
பத்தரமாத்து தங்கமடா...
பக்கத்தில் நீ இருந்தால்
பார் புகழும் போற்றுமடா...
பக்கத்தில் நீ இல்லையே
பருவ மழையும் பொய்க்குதடா..
பாலூட்டி வளர்ப்பாள் அன்னை அவள்...
பார்த்து பார்த்து வளர்ப்பான் என் அண்ணன் அவன்...
கற்பனையில் வாழுதடா மனம்
பக்கத்தில் நீ இல்லையே....
உள்நெஞ்சு நோக
புழுங்குகிறது மனம்
ஒற்றையாய் பிறந்தவளுக்கு...
உன் வரவைத் தேடி!!