மாம்பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தின்றாற் றினவெடுக்குந் தீபனம்போம் நெஞ்செரிவாம்
அன்றே விழிநோய் அடருங்காண் - துன்றிமிக
வாதக் கரப்பானும் வன்கிரந்தி யும்பெருகுஞ்
சூதக் கனியின் சுகம்

- பதார்த்த குண சிந்தாமணி

இதையுண்டால் நமைச்சல், மார்பெரிச்சல், கண்நோய், கருங்கரப்பான், கிரந்தி இவற்றை அதிகரிக்கும்; பசி நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-21, 1:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே