தொலைபேசி உரையாடல்

நீண்ட நேர
தொலைபேசி உரையாடலில்,
அமைதி கொள்கிறது
இரு பக்கமும்...
ஒவ்வொரு பத்து நிமிட
இடைவெளிக்குப் பிறகும்....
தேநீர் இடைவேளையோ..?
இல்லை
பேச மொழியின்றி துடிக்கும்
இரு மனங்களின் பரிபாஷையோ..?
இல்லை
இரு மனங்களின் மௌன ராகமோ..?
இல்லை
இரு மனங்களின் காதல் கீதமோ..?
எதுவாயினும்
புரிதலுடன்
இரு மனங்களின் இணைப்பு....

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (24-Jun-21, 6:31 am)
பார்வை : 130

மேலே