துலங்குந் தண்ணீர்க் குணங்காணே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

ஆற்றுத் தண்ணீர்க் கழகுண்டாம்
..அடைந்த சுனைக்கு மகோதரமாம்;
தூற்று மாரி மெய்யிருக்குந்
..துலையாக் கிணறே கயந்திரட்டும்!
மாற்றுங் குளமே வியாதியில்லை
..மாறாக் குளமே வியாதியுண்டு;
தோற்று மதுர மொழிமயிலே
..துலங்குந் தண்ணீர்க் குணங்காணே!

- பதார்த்த குண சிந்தாமணி

சீவநதிநீர் ஆற்றுத் தண்ணீர் அழகு தரும்; நிழலிலுள்ள சுனை நீர் பெருவயிற்று நோயைத் தரும்; மழைநீர் உடல் தளர்ச்சியைப் போக்கும்; நிலைத்த கிணற்றுநீர் சயத்தை வளர்க்கும்; வரவும் போக்குமுள்ள நீர்
நோய் தடுக்கும்; மாற்றமே பெறாத குளத்து நீர் பிணியைத் தரும்; மாறும் குணமுள்ள குளத்து நீர் பிணிகளை ஏற்படுத்தாது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jun-21, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே