பாசி நீர் முதலிய - பலநீர் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

பாசித் தண்ணீர் நோயாக்கும்
..பருத்த வோடைத் தெளிவூறல்
நேசித் திடவே பிணியில்லை
..நிலைநீர்க் குண்டாங் குடல்வாதம்
மாசித் தண்ணீர் பித்தகற்றும்
..வளர்க்குஞ் சுரத்தைச் சரகூறல்
தேசத் தண்ணீர்க் குணந்தன்னைத்
..தெரியச் சொன்னோந் திண்ணமிதே 45

- பதார்த்த குண சிந்தாமணி

பாசி நீர் பல பிணிகளை உண்டாக்கும். ஓடை நீர் பல நோய்களை நீக்கும். நிலை நீர் குடல்வாதத்தை உண்டாக்கும். தூசு படிந்த பனிநீர் பித்தம் போக்கும். சரகூறிய நீர் சுரத்தை ஏற்படுத்தும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jun-21, 8:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே