இது ஆசையல்ல....

❤️🧡💛💚💚💙💜🖤🤍🤎❤️

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

💃பெண்ணே!
நான் 🌧️மழையாகி
உன் மீது
பொழிய விரும்பினேன்
ஆனால்
நீ குடைப் பிடித்துக் கொள்கிறாய்....

தென்றலாகி
உன்னை
தீண்ட விரும்பினேன்....
ஆனால்
நீ 🪟ஜன்னலை
சாத்தி வைக்கிறாய்...

நான் ✍️கவிதையாகி
உன்னை
மயக்க விரும்பினேன்
ஆனால்
நீ கதை மட்டுமே
படிக்கிறாய் .....

நான்
நிழலாகி
உன் மீது
விழ விரும்பினேன்
ஆனால்
நீ 🌳மரத்தடியில்
நிற்பதே இல்லை.....

நான்
உன்னை
🤝கை பிடிக்க விரும்புகிறேன்
நீ நிராகரித்து விடாதே!
இது
என் ஆசையல்ல
வாழ்க்கை....!!!


*கவிதை ரசிகன்*

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

எழுதியவர் : கவிதை ரசிகன் (24-Jun-21, 8:48 pm)
பார்வை : 84

மேலே