காலம் உள்ள வரை

உன்னைச் சுற்றி வந்த
அன்னம் ஒன்று
அல்லாடி நிற்க கண்டேன்...
நீ வளர்த்த பாசக் கிளி ஒன்று
பரிதவிக்க கண்டேன்.....உன்
மௌனத்தின் காரணம் புரியாமல்.....
கண்டும் காணாதவனாய்
கடந்து செல்ல பார்க்கிறாய்....நீ
கடந்து செல்லும் வழியெங்கும்
உன் காலடி தடமாய் நானிருப்பேன்...
காலம் உள்ள வரை தொடரும்....
என் காதலின் பயணம்
உன் காலடி தடமாய்...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (25-Jun-21, 6:35 am)
Tanglish : kaalam ulla varai
பார்வை : 138

மேலே