பவழமல்லிப் பல்வரிசை

நேரிசை ஆசிரியப்பா

அழகே நின்முத் துப்பல் வரிசையும்
அழகுடைப் பவழமல் லியடிக் கண்ணே
அழகு மல்லித் தொடுக்கவும் தளையடி
கமழ்ந்திடு மணமது கவர்மோ னையடி
மணமிலா மலரும் கண்ணுடை விருந்து
மணமுடை மலரென மனதுடை விருந்து
மார்பில் சூடியே மகிழ்வோம்
மணமிலா காகிதப் பூவை விரும்பாரே........

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jun-21, 6:51 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே