வேட்கை - 6

வேட்கை - 6
பிரியாவைப் பார்த்ததும் மோனிகாவின் முகம் மலர்ந்தது.
நல்ல சமயத்திலேதான் தோழி வந்திருக்கிறாள் என்று நிம்மதியுடன், ”பிரியா வா. எங்கே இந்தப் பக்கம் திடீரென்று... “ என்று வினவினாள்.
”ஹாய் மோனிகா எப்படி இருக்கே? இந்தப் பக்கமா வந்தேன்” என்று சொல்லி விட்டு சுந்தரை பார்த்தாள்.
அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் அவன் வெளியே போனான்.
”மோனிகா, ஏதாவது பிரச்சனையா.. ?.” என்று கேட்டுக் கொண்டே பிரியா உள்ளே வந்தாள்.
”ஒரு பிரச்சனையுமில்ல. சுந்தர் கவிதை ரசிகர். என் கணவரின் நண்பர். அடிக்கடி வீட்டுக்கு வருவார். கவிதையைப் பற்றிப் பேசுவோம்.”
பிரியா மோனிகாவின் நெருங்கிய தோழி. இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். .
”மோனிகா, உண்மையைச் சொல். நீ அவனிடம் கத்திப் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. சுந்தரால் உனக்குத் தொல்லை எதுவும் இல்லையே. அப்படி ஏதாவது இருந்தால் என்னிடம் சொல். நான் தக்க நடவடிக்கை எடுக்கிறேன். சுந்தரும் நானும் மதுரையில்ஒரே ஆபிசில்தான் வேலை செய்து கொண்டிருந்தோம். அவர் நாகர்கோவிலுக்குச் சமீபத்தில்தான் ட்ரான்ஸ்பர் ஆகி வந்தார். அவரை எனக்கு நல்லா தெரியும் என்று சொன்னவள் தான் அவனைக் காதலிப்பதைப் பற்றி சொல்லவில்லை. முதலில் போய் சுந்தரைப் பார்த்துப் பேசுவோம். அப்புறம் இவளிடம் சொல்லலாம் என்று எண்ணினாள்.”
”அவன் என்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறான். என்னை அவனுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது போல் தெரிகிறது. என்னைப் பார்த்தாலே கிறங்கிப் போய் விடுகிறான். எனக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கான். அந்த காமப்பிசாசை எப்படி வெட்டி விடுவது என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று தயங்கிக் கொண்டே சொன்னாள் மோனிகா.”
”அத்துமீறினானா?”
” சரியான சபல கேஸ். என் அழகில் மயங்கி விட்டான். என் இடுப்பில் கை போட்டான். போதாதுக்கு என்னை அணைக்க வந்தான். அவனைத் திட்டி அனுப்பிச்சிட்டேன். இந்த மொபைல் போனை அவன்தான் வாங்கிக் கொடுத்தான்” என்று மொபைலை காண்பித்தாள்.
பிரிவாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவனுக்குத் தான் வாங்கிக் கொடுத்த ஒன் ப்ளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட் போன்தான் அது என்பது தெரிந்துவிட்டது. அதைப் போய் மோனிகாவிடம் கொடுத்து இருக்கிறேனே, படுபாவி. அவன் நாசமாப் போக “ என்று நினைத்தாள்.
அவளுக்குக் கோபம் பொங்கியது. சுந்தர் தன்னை ஏமாற்றி துரோகம் செய்து விட்டான். அவனை உடனே பார்த்து நாலு கேள்வி கேட்க வேண்டும் என்று எண்ணிய பிரியா பரபரப்புடன் கிளம்பினாள். .
”என்ன, வந்தே உடனே கிளம்பிட்டே?”
”எனக்கு ஆபிசில் வேலை இருக்கு. நான் அங்குப் போயிட்டு கொஞ்ச நேரத்திலே வரேன் .”
மோனிகா அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். தொடரும்

எழுதியவர் : SIVASRI (25-Jun-21, 9:38 pm)
சேர்த்தது : sivasri
பார்வை : 51

மேலே