அணிலின் அட்டகாசம் - அமைச்சர் ஆவேசம்

அணில்களின் அட்டகாசத்தால் மாநிலத்தில்
ஆங்காங்கே மின்சாரம் துண்டிப்பு
பூமியின் அடியில் செல்லும் மின்கம்பியிலும்
அணிவகுத்து செல்கின்றன அணில்கள்
அவைகளை அடக்கத் தெரியாமல் மின் ஊழியர்களும்
புதிய அரசின் முதல் அமைச்சரும் .மந்திரிகளும்
தினமும் மனக்கவலையால் கவளச் சோறும்
தின்ன முடியாமல் திண்டாடுகின்றனரே
மாநிலத்தின் மின்கம்பிகளில் பல நூறு தடவை
நடனமாடும் அணில்களை அடக்க ஏதேனும்
மாற்றுவழி இருந்தால் கூறுவீர்கள் ஆலோசனையாக
குருவி, காக்கை, கொக்கு இன்னும் பல பறவைகள்
மின்கம்பிக்கு அருகில் பறக்காமல் இருக்கவே
புதுத்துறையை ஆக்கி மின்சாரத்தை பாதுகாக்க
புது முயற்சி எடுக்கப்பட உள்ளதால்
மாநிலத்தீரே இம் மகத்தான பணிக்கு நீங்களும்
மனமுவந்து உதவீர்களாக, மக்களின் நலனே முக்கியம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Jun-21, 5:13 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 21

மேலே