சுகமான தனிமை

கடந்துவிட காத்திருக்கும்
நகரா என் இரவுகள்...

அதனூடே மௌனித்து
கிடக்கும் கரையாய் என்நெஞ்சம்...

ஆக்ரோஷமாய் வருகிறாய்
ஓங்கி அடிக்கும் அலையாய்...

இதயம் தழுவி
சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்...

சிதறிய நினைவுத்துளிகள்
சித்தத்தில் கிளிஞ்சல்களாய் பரவிக்கிடக்க...

தனிமை சுகமாகிறது
நீளும் தூங்கா என்இரவுகளில்..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (28-Jun-21, 1:38 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : sugamaana thanimai
பார்வை : 833

மேலே