மனிதநேய கடவுள்

மனிதநேயம் இன்றும்
உள்ளதா என்றால்
உள்ளது என்று
அடித்து சொல்லலாம்
கொரோனாவை கூட
எய்ட்ஸ் வருத்தமாய்
கூடாத நோயாய்
இரத்த உறவுகளே
தூரமாய் நிற்க
அருகில் வந்து
மருத்துவம் பார்க்கும்
தெய்வங்கள் அவர்கள்

சுட்டெரிக்கும் சூரிய
கதிர் வெப்பத்தில்
ஆடைகளை கழட்டி
தூர எறிந்துவிட்டு
காத்தாட இருக்க
விரும்பும் போது
மூன்றோ நான்கு
அடுக்கு பாதுகாப்பு
அடை அணிந்து
உடல் முழுதும்
வெந்து வியர்வையால்
குளித்து நனைந்தும்
முகம் சுளிக்காது
மக்களுக்காக மக்களுடன்
சேவை செய்யும்
மருத்துவ குழுவும்
சுகாதார குழுவும்
இன்று வாழும்
மனிதநேய கடவுள்கள்

அவர்களுக்காக நீங்கள்
சிலைகள் வைக்கவேண்டாம்
நீங்களும் மனிதநேயமாக
நோயை புரிந்து
தனித்து வாழுங்கள்
கொரோனாவை ஒழிப்போம்
வாழ்க்கையை வாழுவோம்

-பெல்ழி

எழுதியவர் : பெல்ழி (28-Jun-21, 2:52 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 107

புதிய படைப்புகள்

மேலே