தடுப்பூசி எடுக்கப் போனா ஆதாரைக் காட்டு

முதல்வேலை பெற்றோரிடம் அன்பை காட்டு
வாழ்க்கையில் உனக்கு கிடைக்கும் பாராட்டு

குழந்தைகளுக்கு நீயே இரு, எடுத்துக் காட்டு
உன்னுடன் பழகுபவர்களிடம், நட்பை காட்டு

எவரும் அறிவுரை கேட்பின் நல்ல வழி காட்டு
அக்கிரமங்கள் நடந்தால் அதை சுட்டிக் காட்டு

அழகியதைக் கண்டால், சிரித்த முகம் காட்டு
எவரும் அடாவடி பண்ணா, திருத்திக் காட்டு

வழிப்போக்கனிடம் சரியான வழியை காட்டு
துன்பப் படுபவர்களிடம் கருணையை காட்டு

தடுப்பூசி எடுக்கப் போனா ஆதாரைக் காட்டு
எல்லோரும் வாழக் கடவுளே, நீ அருள் காட்டு!

ஆனந்த ராம்

எழுதியவர் : (28-Jun-21, 3:51 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 28

மேலே