அழகான மென்மையான ஆடை வாழ்க்கை

இனிய சில, பல உறவுகளால் பின்னப்பட்ட அழகான மென்மையான ஆடை வாழ்க்கை!

அன்புத் தாய் தந்தையருடன் தெய்வீக உறவு
சகோதர சகோதரிகளின் இனிய பாச உறவு
பிடித்த உறவினருடன் கூடி மகிழ சில உறவு
பள்ளிக் கூடத்தில் மாணவர்களுடன் ஒரு உறவு
கல்லூரியிலும் மாணவர்களிடம் தனி உறவு
அண்டை வீட்டாருடன் சண்டையில்லா உறவு
அலுவலகத்தில் சில தோழர்களின் நல்லுறவு
ரயில் பஸ் சினேகத்தினால் வரும் புது உறவு
வாலிபக் காதல் வந்து, கொடுக்கும் சுக உறவு
வாழ்க்கைத் துணையுடன் வாழ்நாள் புனித உறவு!
குழந்தையை பெற்றோர் பேணிக்கும் அன்பான உறவு!

இந்த உறவுகளை எல்லாம் கடந்து, நம்மை நம் குணங்களை நன்றாக அறிந்து, தெரிந்து கொண்டு, நம் சுக துக்கங்கள் அனைத்திலும் பங்கு கொண்டு, நம் மனதில் உள்ளதை எல்லாம் ஒளிவு மறைவின்றி சொல்லி பறிமாறிக் கொள்ளும் அற்புதமான உறவு, மிகவும் கொடுத்து வைத்த சிலருக்கு மட்டுமே வாய்க்கும் அழகான, ஆழமான, ஆத்மார்த்தமான, அற்புதமான, அருமையான நட்பு உறவு!


ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்ரமணியன் (28-Jun-21, 10:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 47

மேலே