சித்தர்களின் தமிழ்

சித்தர்கள் தமிழ்

நேரிசை ஆசிரியபபா

அகத்தியர். சீடனாம் அத்தேரை யன்தான்
மகத்து பதார்த்தனூல் காண்டான் -- சுகமாக
எண்சீர் விருத்தமதில் சேர்த்தனன் அங்கங்கே
கண்ணான மோனை களும்


டாக்டார் திரு வ.க.கன்னியப்பன் அவர்கள் தேரையசித்தர்
எழுதிய பதார்த்த குண சிந்தாமணி என்ற பழம்பெரும்
சுவடி நூலை ஆராய்ந்து இத்தளத்தில் கொடுத்து வருகிறார்.
அவர் ஆராய்ந்து எடுத்து அச்சுப்பிழைகளை நீக்கி அப்பாடல்
என்ன வகையுடையது என்று தேடிக் கண்டுபிடித்து நமக்கு
கொடுத்த ஒரு பாடல்தான் கீழே வருகிறது.அதில் மருத்துவன் யார்
அவன் எப்படி யிருக்க வேண்டும் என்று தேரையர் சொல்லியுள்ள
பாடலை. நம் மருத்துவர் நமக்கு சொல்கிறார்.
டாக்டர் அவர்கள் எதுகை . மோனை களை அகத்தியரும் தேரையரும்
தங்கள் பாடல்களில் யாப்பு இலக்கணத்தை மீறாது கடைப்பிடித்தார்கள்
என்று நிரூபணம் செய்தமைக்கு பாராட்டுவோம்.
இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் அந்த எண்சீர் ஆசிரிய
விருத்தப் பாடலில் எல்லா வரியிலும் 1 ஆம் சீர் 5 ஆம் சீரிலும்
தேரையர் தவறாமல் தக்க மோனைகள் போட்டு இருப்பது
ஆச்சரியத்தை கொடுக்கிறது
ஆனால் இக்காலத்தில் எண்சீர் என்று எழுதும் கவிஞர்கள்
மோனையை ஒரு வரியில் கூட போட மறுக்கிறார்களா அல்லது
மறக்கிறார் களா என்று தெரியவில்லை. மற்றவர்களாவது
இனி போடட்டும் என்று இதை வற்புறுத்துகிறேன்.

மருத்துவன் குணம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

தெய்வவுபா சனைபலநூ லெல்லை காண்டல்
..திரிகரண சுத்திபன்னோய் தீர்த்த னாளு
நைவகன்ற தீரமதி நுட்பஞ் சான்றோர்
..நட்பொழுக்க மேன்மைகுண மன்புள் ளானாய்
மெய்வசுதை விகலையணங் குறைப தார்த்த
..விதியுடற்கா தாரமட லங்கி மாந்தல்
கைவருமெண் பேதமெலா முணர்ந்துற் றானாய்க்
..காணிலந்த மருந்துவன்கைக் கரணி யுண்ணே

- பதார்த்த குண சிந்தாமணி

எழுதியவர் : பழனி ராஜன் (29-Jun-21, 2:58 am)
பார்வை : 28

மேலே