காதல் சொல்ல வந்தேன்

மாலை சரியாக 4.55 மணி.அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்நேரத்தில்"டிரிங்,டிரிங்..டிரிங்ங்..டிரிங்ங்"என்று ஒலிக்க வேகமாக போனை அட்டன் செய்தாள் கயல்.ஹலோ,'சாயங்காலம் 6 மணிக்கு நீலாங்கரை பீச் க்கு வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்' என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
கார்மேகம் கூடி மழைசாரலை ஆங்காங்கே தெளிக்க,தருண்ணும்,கயலும் கடற்கரைக்கு வந்தனர். இதமான கடற்கரை காற்று,லேசான மழை தூறல்,பாதங்களை தழுவிச் செல்லும் கடற்கரை அலை என ரம்மியமாய் இருந்தது அந்த மாலைப் பொழுதில்.
கயல்,"காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்"? என்று கேட்டான் தருண்.சட்டென்று கயல் அவன் கண்ணை பார்த்தவளாய்,"கண்ணும் கண்ணும் காதல் சொல்லும், நெஞ்சும் நெஞ்சும் பேசிக் கொள்ளும்."ஐ லவ் யூ" என்ற வார்த்தையை விட புரிதலில் இருக்கும் இரு மனதின் சங்கமங்கள் அழகானது"என்று இவளது காதலைச் சொல்லாமல் சொல்ல"வாவ்"என்றவன் அவள் கையை பிடித்துக் கொண்டு உன் கண்கள் என் காதலைச் சொல்லுமா?உன் நெஞ்சம் என்னிடம் பேசுமா? என்று அவன் காதலைச் சொல்லாமல் கேட்க,இருவரின் கண்ணும் காதல் சொல்லியது அன்று.
"எக்கா,எக்கா இந்தாக்கா வாங்கிக்க" என்று சுண்டலை நீட்டியவன் காசை வாங்கிக் கொண்டு "காதல் சொல்ல வந்தேன்,உன்னிடத்திலே" என்ற பாடலை பாடிக் கொண்டே அங்கிருந்து நகர,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டவர்களாய் அங்கிருந்து கிளம்பினர்.

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (29-Jun-21, 6:38 am)
பார்வை : 326

மேலே