தேவமங்கை

தேவமங்கை

நீ தலையில்
சூடும் வரைதான்
அதன் பெயர் மல்லிகை
சூடிய பின் அதன் பெயர்
மூலிகை

நீ
கழுத்தில் அணிந்திருக்கும்
மணிகள்
ஒவ்வொன்றும்
சீவகசிந்தாமணி

உன் வளையல்கள்
ஒவ்வொன்றும்
வளையாபதிகள்

உன் பல் வரிசைக்கு
இந்திய அரசு
பரிசாய் தரும் நோபல்

நீ தை மாதம்
பிறந்த தேவதை

ஆய கலை
64 கலைகளில்
மிக அழகிய கலை
மணிமேகலை

உன் குரல்
அது குரல் அல்ல
திருக்குறள்
உன் விரல்
விரல் அல்ல
மாணிக்கப் பரல்

உன் கூந்தல்
கூந்தல் அல்ல
ராந்தல்
உன் கண்கள்
கண்கள் அல்ல
அது கன் கள்

இவ்வுலகின்
மிகச் சிறந்த பூ
அது உன் சிரிப்பு

தொல்காப்பியர் உன் தோல் அழகை கண்டிருந்தால் தோல்காப்பியம் எழுதியிருப்பார்

இளங்கோ அடிகள் உன் சிவப்பழகை கண்டிருந்தால் சிலப்பதிகாரம் எழுதாது சிவப்பதிகாரம் எழுதியிருப்பார்

நீ அன்னைக்கு பிறந்தவள்
அல்ல அன்னத்திற்கு பிறந்தவள்

நீ ரம்பை ஊர்வசி மேனகையின் கூட்டுத்தொகை
நீயும் மயில் தான் இருந்தால்
கூட்டுத்தோகை

நீ கர்ப்பத்திற்கு பிறக்காது
பிரம்மன் வடித்த
சிற்பத்திற்கு பிறந்தவள்

கவிஞர் புதுவை குமார்

எழுதியவர் : Kumar (30-Jun-21, 1:01 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 93

மேலே