ஒல்லும் முறையில் பெற்றேன் வெற்றி - காப்பியக் கலித்துறை

காப்பியக் கலித்துறை
தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா)

அல்லும் பகலும் அலைந்தேசெலும் ஆசை வைத்து
வெல்லும் வகையில் விரைந்தேபுகும் வேட்கை கொண்டு
செல்லும் வழியைச் செறிவாயுறச் சிறக்க எண்ணி
ஒல்லும் முறையில் உயர்வுங்கொள உளது வெற்றி!

– வ.க.கன்னியப்பன்

எ.காட்டு:
காப்பியக் கலித்துறை
தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா)

தெள்வார் மழையும்; திரைஆழியும் உட்க. நாளும்;
வள்வார் முரசம் அதிர்மாநகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ 73

- நகரப் படலம், பால காண்டம், ராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jul-21, 10:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே