தொலைந்து போனதாக உணரும் போது

தொலைந்து போனதாக உணரும் போது
தொலைவாய் போனது சந்தோசம்...

தொலைத்தது எங்கே என
திசை அது தெரியாமல்
திணறலாய்....

நித்தமும் நித்திரை தொலைத்து
நினைவுகள் எல்லாம் நிகழ்காலத்தை
இழந்தபடி...

என் சந்தோசத்தின் தொடர்பறுத்து
தொலைக்கும் வாழ்க்கை அது
தொலைவாய் போன உன் நினைவுகளுடன்...

நினைவுகள் மட்டும் சுமந்தபடி
நித்தம் செல்லும் வாழ்க்கை
அது சந்தோசத்திற்கு சத்தம்
கேட்காத தூரத்தில்...

இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ )
+91 -98438 -12650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ ( மகோ ) (3-Jul-21, 9:54 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 117

மேலே