ஆன்மாவைத்தேடி

என் இதயத்து ரகசியங்களை
திருடி உன் இதயத்தில்
பூட்டி வைத்துக்கொண்ட நீ
ஒரு தேசத்துரோகியே!

என் கனவுக்கு உரு கொடுத்து
என்கவிதைக்குக் கரு கொடுத்து
எனக்கு உறவும் கொடுத்த
உனக்கு மட்டும்
உயிரில்லாமல் போனதேன்?

உன்உதிரமும் என்உதிரமும்
ஒன்றுசேர்ந்து உதிர்த்துவிட்ட
உதிரிப்பூக்களை, என்னிடம்
மட்டும் விட்டு சென்றதேன்?

உன் ஆன்மாவை
வீசும் காற்றுக்குள்ளும்
விழிகளின் கனவுக்குள்ளும்
பரந்த வானத்திலும்
பாடும் ராகத்திலும்
தேடிக் கொண்டிருப்பேன்
இதயத்துடிப்பு நிற்கும்வரை...

எழுதியவர் : ரோகிணி (4-Jul-21, 1:25 pm)
சேர்த்தது : Rohini
பார்வை : 54

மேலே