செப்பக்கழிவதில்லை

திட்டுத்திட்டாய்
உன் புன்னகைகள்...
நம் பருவங்களில் அது
மழைத்துளி சொல்லும்
மந்திரக்கனவுகள்.

நதி தவழும் காற்றும்
கேட்கக்கேட்க
நாணத்தில் சிவக்கும்
கண்களால் நீயெனக்கு
சொல்ல வருவதெல்லாம்.

பூக்களில் வடிகட்டிய
வாசனை அயனிகளின்
நீள் அலைவரிசையில்
நில்லாமல் செல்கிறது
மின்சார வெக்கங்கள்.

பூக்கும் உன் சொல்லில்
மோகம் உதிர்த்ததொரு
முனிவனாய் நான் இருக்க

நம் காமம் கண்டறிந்து
வந்து நின்ற நிலவுக்கு
சாபம் தீர்ந்தது போல்
இருக்கிறதாம்... உன்
கொங்கைகளில் நான்
பசியாறும் காட்சிகள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Jul-21, 12:43 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 87

மேலே