எடைக்கு மடக்கு

பன்றியின் மார்பிலே கொம்பாம்,
பார்த்தவர் உலராம்;
பாம்பின் வாயிலே பனங்கற்கண்டாம்
பார்த்தவர் உலராம்;
பசு மாட்டுப்பால்,
பச்சை என்றானாம்;
பருகினேன் என்றானாம்.
பசிப்பவன் வயிற்றுக்கு பஞ்சாமிர்தமும் பாயாசமுமாம்
கேட்பவர் உலராம்.
பரம பிச்சைக்காரணுக்கு,
பாய்விரித்துறங்க இடமாம்;
பட்டாலம் போனவன் படுத்துறங்க நினைத்தானம்;
பகலில் நிலவாம்;
பாரிலே பகைப்போர் இலராம்;
பார்த்தவர் உலராம்.
பசிக்கு விருந்தாம்,
பரிமாற நோவாம்;
பகையிலே நெருப்பாம்,
பத்தியது மனதாம்;
புத்தி கெட்டொழிய சித்தியாம்;
சத்தியமாம் சன்மார்க்கமாம்,
சம்பிராதயமாம் சடங்காம்,
சாதிபேதமாம் சண்டாலர்களாம்,
வித்தான வித்தாம்,
விதைத்து வந்த முத்தாம்;
முத்தான முத்தாம் முத்துச்சிப்பியிலே கரியாம்;
முறையிட்டவர் உலராம்;
முயற்சியில் தோல்வியாம்.
முட்டால் விட்ட சவாலாம்;
முழுமதியை விழுங்கியது பாம்பாம்
முன்னோர் சொன்ன கூற்றாம்;
முகக் கரிபூசி,
கருப்பானது முகமாம்.
சிங்காரி சிங்காரி என்பவ,
சீழ்பிடிச்சி வந்தாளாம் ;
கட்டழகி கண்ணுல கண்மை வைக்க அழுதாலாம்.
காசிக்கு போனவை
கருமத்தை வெல கொடுத்து வாங்கி வந்தானாம்;
காசுக்கு முதுகிலே மூனு சவாரி செய்தானாம்;
கால் பணத்திற்கு காரு பங்கலாவாம்,
காப்பாற்ற ஊரவிற்றானாம்;
காலு பவுனுல தாலியாம்;
காடவிற்று கல்யாணம் செய்தானாம்.
எலிக்குக் கோவணமாம்,
எட்டிப்பார்த்த புலி அம்மனமாம்;
எலி தலையிலே கோடரி விழுந்ததாம்;
எலிவாலைப் பிடிச்சி எமலோகம் போனானான்;
எலிக்கும் பூனைக்கும் ஏகப்பொருத்தமாம்;
ஏழுதப்படிச்சவன் ஆட்டப்பிடிச்சி அம்மா அம்மான்னு சொல்லச் சொன்னானாம்;
பந்திக்கு வந்தவன் பசி இல்லை என்றானாம்;
பழுது பார்க்க வந்தவன்
பழசா இருக்கு பார்க்க முடியாது என்றானாம்;
பாடத்தெரியாதவன்,
பாட்டில சுதி இல்லை என்றானாம்;
புன்சிரிப்புக்கு புத்தூர்போயி,
புன்னானதாம் வாயி;
நடவு நட வந்தவள்,
நட்டுக்குட்டு நின்றாளாம்;
நாட்டியம் ஆடவந்தவள்,
நடனமேடை கோணல் என்றாலாம்;
நாளுகாசு சம்பாதிக்கத்தெரியாதவனுக்கு,
நாளுபெண்டாட்டியாம்;
நழுவிபோறவான்,
வழுவா பிடிச்சானாம்;
உண்மை உறங்கும் போது,
பொய் புறப்பட்டுபோனதாம்;
ஏணி ஏறத்தெரியாதவன்,
சுண்ணாம்பு அடிக்கப் போனானாம்;
நம்பிக்கை இல்லாத நத்த,
நடு முதுகுல வீட்டச் சுமந்ததாம்;
ஏறிப்போக பயந்தவன்,
ஏணியசுமந்து போனானாம்;

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (5-Jul-21, 1:25 pm)
பார்வை : 148

மேலே