நினைவுகள்

ஆடி பொறக்குது,
பாட்டி பேச்சு கேக்குது.
கேட்ட பேச்ச ஏத்திக்கிட்டு, பள்ளிக்கூடம் போகுது.
கூட்டாளி கூட்டம் எல்லாம்,
ஒன்று கூடி சேர்ந்துச்சு,
முடிவு பல எடுத்துச்சு.
மாலை வேளை,
தண்டல் வரவு உண்டியலை
நெறச்சுச்சு.
விநாயகர் கோயில் முன்னே ,
டெக்குப் போடப்
பஞ்சாயத்து முடிஞ்சுது.
விசில் சத்தம்,
அமோகமா இருந்துச்சு.
கூட்ட நெரிசல்,
தெரு ஓரம் ஊரு ஒன்னனாச் சேர்ந்துச்சு.
காட்சி பல தெரிஞ்சுச்சு .....,
கதை விடிய விடிய ஓடிச்சு...,
ஒருபுறம் மாமியார் துக்கம்,
மறுபுறம் மருமகள் ஏக்கம்,
நடுநடுவே பங்காளி சத்தம், திரைமறைவில் காதலர் யுத்தம்,
என ஊர் உண்மை புரிஞ்சிச்சு. இடையிடையே,
இளசுகள் சத்தம் கூடிச்சு,
கிழவி வசவு போட்டுச்சு.
அவன் மட்டும், அவள் அருகே..,
அவன் கைவிரல்கள் வீணை மீட்ட, இசைத்தன அவள் கால்கள்...,
அவனது,லயத்தில்.
மீண்டன நினைவுகள்,
தேடின ஆடியை......!

எழுதியவர் : சோழ வளவன் (6-Jul-21, 6:55 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : ninaivukal
பார்வை : 113

மேலே