ஏய்..பெண்ணே!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஏய் பெண்ணே!
🌸நீ என்ன
நடைபெற்ற சிற்பமா ?
இல்லை
நாணம் பெற்ற
சித்திரமா?
🌺உருவம் பெற்ற
பூங்காற்றா?
இல்லை
பருவம் பெற்ற
புதுநாற்றா?
🌼மறைவற்ற
வானவில்லா?
இல்லை
மாசற்ற தமிழ்
சொல்லா?
🌻உணர்பெற்ற
வீணையா?
இல்லை
குளிர்ச்சி பெற்ற
தீபமா?
🌷அசைவு பெற்ற
கோபுரமா?
இல்லை
விலைமதிப்பற்ற
பொக்கிஷமா?
🌹ஆடைப்பெற்ற
அருவியா?
இல்லை
அணிகலன் பெற்ற சிட்டுகுருவியா?
🥀புன்முறுவல் காட்டும் சிலையா?
இல்லை
புடவை கட்டிய
மழையா?
🌷உறுதியாகச்
சொல்ல முடியவில்லை.....
உன்னை
வர்ணித்து எழுதினால்
கவிதைக்கு முடிவே
இல்லை....!
*கவிதை ரசிகன்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹