மதுக்கொடுமை
. மதுக்கொடுமை வலையற்சிந்து
===
மதுக்கடையே திறந்தனரே
மாந்தருயிர்க் கென்று – தினம்
மாத்துயர மென்று – உயர்
மானமதை இன்று – பலர்
மத்தியிலே விட்டுவிடும்
மந்தையெனு மொன்று
**
இதுவரையே எல்லையென்றே
எவர்குடித்தார் சொல்லு – மது
இயன்றளவு கொல்லும் – அந்த
எமனழைத்துச் செல்லும் - ஒரு
இடுகாட்டுப் முட்பாதை
எனக்கவனம் கொள்ளு.
**