தமிழ்

ஐவகை சிந்து பாடல்கள்
==========================
1)ஆனந்தக்களிப்பு
===================
நாவாலு ரைத்திடு வாயே – தமிழ்
நாடிந ரம்பினில் நாட்டிய மாயே
பாவாய சைந்திடு மாமே – நிதம்
பாங்குடன் பாடிப்ப யனுறு வோமே

2)நொண்டிச்சிந்து
==================
)ஆதியில் வந்தது வே – தமிழ்
ஆண்டவன் மொழியா யானது வே
நாதியற் றவரு மே – பேச
நாவினி லினிக்கி றத்தேனா மே
**
3)கும்மிச்சிந்து
===============
திக்குக லெட்டிலும் தேன்மழைப் பெய்திட
தீந்தமிழ் மேகமா யானது வே
மக்குக ளுமந்த மழைந னைந்திட
மாபெரும் மேதையென் றாகுவரே
**
இலாவணி
==========
செந்தமிழில் பேசுகின்றச் சிங்களவர் காணுகையில்
சிந்தையிலே தேனருவி பாயும் பாயும்
எந்தமொழிக் காரர்களும் எம்தமிழைப் பாடுகையில்
எழுந்திருந்து வாழ்த்துரைக்கும் வாயும் வாயும்
**
5)ஒயிற்கும்மி
=============
தாயினும் மேலென தமிழ்மொ ழிமீது
தன்னுயிர் வைத்தவர் தாழ்ந்ததுண்டா
தமிழாலொரு குறைவேயிலை தரமேயது அறிவாயினி
தனித்த மிழில்பே சத்தயங் குவதேன்டா

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Jul-21, 1:29 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 61

மேலே