விலைமாது பேசுகிறேன்

விலைமாது பேசுகிறேன்.

நாங்கள் கற்பை காத்திடும்
கண்ணகிகள் அல்ல
தினம் கற்பை விற்கும்
சதை வியாபாரிகள்.

நாங்கள் ஆண்ட
பரம்பரை அல்ல
எங்களை ஆண்ட
பரம்பரைகள் பல,பல
உண்டு.

அச்சம், மடம்,
நாணம்,பயிற்பு
பற்றி அரிச்சுவடி
அறியாத அசிங்கங்கள்.

பகலில் தூக்கம்
இரவில் விழிப்பு
கால் செண்டரில்
வேலை பார்ப்பவர்கள் அல்ல
கால் கேர்ள்ஸாக
வேலை செய்பவர்கள்.

வசதிக்கு ஏற்ப தொழில்
சொகுசு மெத்தையில்
சில சமயம்
கிழிந்த பாயில்
பல முறை
கட்டாந்தரையிலும்
அனுபவம் உண்டு
தெரு முனை இருட்டில்
மூத்திர சந்தில்...

ஒருவனுக்கு ஒருத்தி
குடும்ப பெண்களின்
வாழ்க்கை.
ஐவருக்கு ஒருத்தி
பஞ்சாலியின் கதை.
ஒரே இரவில் எத்தனை
தாலி கட்டாத புருஷன்கள்
கணக்கு பண்ண முடியவில்லை.

எங்களிடம்
பட்டை போட்டு
கொட்டை போட்டவனும்
வருகிறான்.
பாதம் வைத்து நாமம்
போட்டவனும் வருகறான்.

வாய்கிழிய
பெண் விடுதலை
பேசுபவன் வரிசை
கட்டி நிற்கிறான்.
ரூம் போட்டு
அனுபவித்த கரை
வேட்டிகாரர்கள் பலர்.


சொல்ல கூச்சமாக
இருந்தாலும்
வேடிக்கையாக
படியுங்கள்.
எங்கள் முக்கோன
ரசிகர்களை பற்றி...
எங்களை வாழ வைக்கும் தெய்வங்களாகிய
வாடிக்கையாளர்கள்
பற்றி....


வில்லேந்தி வரும் விடலைகள்
கோலுச்ச வந்தவர்கள்,
பார்க்காததை பார்த்தவுடன்,
பாவம் ஆர்வ கோளாரில்
பெரும்பாலும்
சுயேட்சியாக நின்று
டெபாஸிட்
இழந்து விடுவார்கள்.

முப்பதை தாண்டிய
தருமவான்கள்
பெட்டை கோழி மீது
சேவல் அமர்வு போல்
சில நொடியே
அவர்களின் சாகசம்....

நாற்பதை தாண்டிய
நல்லவர்கள்
வல்லவர்கள்
வாத்சாயனார்
பேரன்கள்
கொடுத்த காசுக்கு
வேலை வாங்கிவிடுவர்
பெண்டு கழட்டிவிடுவர்.

அறுபதை தாண்டிய
அனுபவசாலிகள்
ஆர அமர கிணறு
வெட்டி ஊற்று வரும்வரை
விடமாட்டார்கள்.

சில விசித்திர
கோமகன்களும்
உண்டு.
இதை சொல்ல கூச்சமாக தான்
உள்ளது.
என்ன செய்வது
சொல்வதெல்லாம்
உண்மை.
உண்மையை தவிர
வேறேதும் இல்லை.
இவர்கள் இசை
பிரியர்களாக இருக்க வேண்டும். தண்டாயுதபாணிகள் சிலர் புல்லாங்குழல் வாசிக்க
சொல்லுவார்கள்.
சில சர்க்கரை வியாதிகாரர்கள்
எங்கள் யோணியில்
பீப்பி வாசிப்பார்கள்.

கால் வயிற்றை கழவ
கல்லு மண்ணு தூக்கி
பொழப்பு நடத்தியிருக்கலாம்.
காலகாலமாக
பழக்கப்பட்ட
எங்களின் வாழ்க்கை
வழக்கமாக மாறியது.
இப்போது
கண் கெட்ட பின்னே
சூரிய நமஸ்காரம்.

சமூகத்தில் நாங்களும் வாழ்கிறோம்
சாக்கடைகளாக.
சமூகத்தில் நாங்களும்
வாழ்கிறோம் நோயின் கிடங்காக.
சமூகத்தில் நாங்களும்
வாழ்கிறோம் துற்நாற்ற காற்றாக.
சமூகத்தில் நாங்களும் வாழ்கிறோம்
நடை பிணங்களாக.
சமூகத்தில் நாங்களும்
வாழ்கிறோம்
இன்பம் தரும் இயந்திரமாக.

இந்த மரகட்டைகளுக்கும்
ஆசை அபிலாசைகள்
உண்டு.
எங்கள் அடுத்த தலைமுறையாவது
விபச்சாரம் அபச்சாரம்
என்று உணர்ந்து
கலாச்சாரம் அறிந்து
பண்பாடுடன் வாழ
அந்த ஆண்டவனை தவிர வேறு யாரடம் கோரிக்கை வைப்போம்.

- பாலு.

சிகப்பு விளக்கு எரிகிறது என்ற புஷ்பா தங்கதுரையின் கட்டுரை படித்ததின் தாக்கமே மேலே உள்ள பதிவு.

எழுதியவர் : பாலு (12-Jul-21, 10:51 pm)
சேர்த்தது : balu
பார்வை : 54

மேலே