பொதுபுதுஇலக்கணம்

எங்கள் வாழ்க்கை
இல்லை,
எங்களிடம்!
காய்ந்த சருகாய்,
நாள் வழிப்பயணம்.
மாற்றம் பெற போராட்டம்,
தினசரி ஆர்ப்பாட்டம்.
போராட்ட,ஆர்ப்பாட்ட,
வன்முறையில் உடலெல்லாம் சேதாரம்.....!
ஜனமிக்க தேசத்தில்,
மனம் தேடும் படலம்,
நீண்டு செல்லும் அவலம்...,
தேடி செல்லும் பொழுதுகள், பகல்நேர இரவுகள்.
அறுவை சிகிச்சைப் பந்தியில் படையலாய் பரந்து கிடக்கும்,
எங்கள் உடல்கள்,
மாணவருக்குப் பாடம்,
மருத்துவருக்கு அனுபவம்.
ஆறுதல் தேட வில்லை,
கண்ணீர் துடைக்க
வேண்டாம் கைகள்.
வெகுஜன இலக்கணத்தில்,
இது ஒரு புது இலக்கணம்
"மூன்றாம் பால்" என எழுதுங்கள் போதும்...,

எழுதியவர் : சோழ வளவன் (13-Jul-21, 10:16 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 72

மேலே